சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்

(UTV|COLOMBO)-யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சுய தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான உதவித் திட்டங்கள், கடனுதவி வழங்கல், மற்றும் தையல் பயிற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கல் ஆகிய தொடர்பில் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள அங்குரார்ப்பண விழா பற்றிய உயர்மட்டக்கூட்டம் இன்று (16) காலை யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிதீன், கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் நெடா அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இந்த எழுச்சி விழாவில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், கௌரவ அதிதிகளாக அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிஷாட் பதியுதீன் மற்றும் முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன், உட்பட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிட்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ராஜீவ் காந்தி படுகொலை: இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடு(VIDEO)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நட்டம் தொடர்பில் கணக்கீடு செய்ய நடவடிக்கை

மழையுடனான காலநிலை தொடரும்