உள்நாடு

அமைச்சரின் செயலாளர் எனக்கூறி நிதி மோசடி செய்த நபர் கைது

(UTV|கொழும்பு) – அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனுடைய பிரத்தியேக செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நிதி மோசடியில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அமைச்சர் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய மாத்தளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் எந்த மாற்றமும் இல்லை.

அரச நிறுவங்களின் பணி புரியும் ஊழியர்களின் சீருடை தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை!