சூடான செய்திகள் 1

அமைச்சரவைக் கூட்டம் இன்று (18)…

(UTV|COLOMBO)  கடந்த வாரம் இடம்பெறாதிருந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதுடன் இதற்கான உத்தியோகபூர்வ தகவல் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

பாராளுமன்றத் தெரிவுக் குழுவை கலைக்கும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர்களை அழைத்து அறிவித்திருந்தார். இதனை அடுத்து கடந்த வாரம் செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.

 

இருப்பினும் தற்போது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு இணங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்

Related posts

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

“ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகை : நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” அமைச்சர் கஞ்சன

அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்