வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி…

(UTV|AMERICA) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, லீ கவுண்டியின் பீராகார்டு நகரில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், லீ கவுண்டியில் சுமார் 5000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சூறாவளி காரணமாக 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

ஜேர்மனியில் இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள்

Australian High Commissioner calls on Raghavan

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டமூலம்