வளைகுடா

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி இளவரசி…

(UTV|SAUDI) இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமுலில் உள்ளன.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சவுதி இளவரசிகளில் ஒருவரான ரிமா பின்ட் பன்டர் என்பவர் அமெரிக்காவுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக தற்போது அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பதவி வகிக்கும் சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் இணைத்துப் பேசப்படுவதால் இந்த புதிய நியமனத்துக்கு சவுதி அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

கடும் மழை, வெள்ளம் – 7 பேர் உயிரிழப்பு

கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபிய இளவரசர் இந்தியா விஜயம்