உலகம்

அமெரிக்காவில் காட்டுத் தீ – 30,000 பேர் வெளியேற்றம்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் வீடுகள் கருகி நாசமடைந்துள்ளதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் 30,000 பேர் வெளியேறியுள்ளனர்.

கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர் (1,182 ஹெக்டயர்) நிலப்பரப்பு தீயினால் எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து வீசும் பலத்த காற்றினால் தீ பரவி வருவதால் ஆபத்து அதிகரித்திருப்பதாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோபாங்கா கனியன் மலைகளில் இருந்து மக்கள் வெளியேறியபோது, தீ அங்கிருந்து பசிபிக் பெருங்கடலுக்கு பரவியதால், ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டின் குரோலி தெரிவிக்கையில்,

ஒருவருக்கும் காயம் ஏற்படாததால் இந்த கட்டத்தில் நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். 10,000 வீடுகளில் 25,000 க்கும் அதிகமான மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

விமானத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் கடலில் இருந்து தண்ணீரை எடுத்து அருகில் உள்ள காட்டுத் தீயை அணைத்தனர். தீப்பிழம்புகள் வீடுகளை சூழ்ந்த நிலையில் புல்டோசர்களினால் கைவிடப்பட்ட வாகனங்களை வீதிகளில் இருந்து அகற்றப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் சூரியன் அஸ்தமனத்திற்கு பின்பு ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் டோபாங்கா கேன்யனுக்கு செல்லும் மலைகளை ஒளிரச் செய்தன.

Related posts

‘டெல்டா’ வை மடக்கும் ஸ்புட்னிக் வி

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் பலி

பாகிஸ்தான் இன்னொரு இலங்கையாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை – இம்ரான்