வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் கடுங்குளிர் – 8 பேர் உயிரிழப்பு

(UTV|AMERICA)-அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக காணப்படுவதுடன், சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி அளவிலும், மிச்சிகனில் மைனஸ் 37 டிகிரி அளவிலும் குளிர் நிலவுகிறது. இது, மைனஸ் 40 டிகிரியை தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக சிகாகோவில் ஆறு முற்றிலும் பனிக்கட்டியாக மாறியுள்ளது.

இதேவேளை, பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் சுமார் 250 மில்லியன் மக்கள் இந்த கடுங்குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

அரசின் அனுமதியுடன் கஞ்சா விற்பனை…

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவு

IAEA chief Yukiya Amano dies at 72