உலகம்

அமெரிக்காவில் 45 இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 நோயாளிகள்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் ஒரே நாளில் 64,000 இற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 இலட்சத்தை நெருங்குகிறது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொவிட்-19 இனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 இலட்சத்தை நெருங்குகிறது.

மேலும், அங்கு கொரோனாவுக்கு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – அன்டோனியோ குட்டரெஸ் இடையில் சந்திப்பு.

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

மலேசியா – நாளை முதல் முடக்கநிலை