அரசியல்உள்நாடு

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை – அரசாங்கம், எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து சிறந்த தீர்வொன்றை எடுப்பார்கள் – ஜீவன் தொண்டமான் எம்.பி

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய சர்வக்கட்சி கூட்டம் நேற்றைய தினம் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் ஜனாதிபதியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதி இந்தக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பினை விடுத்திருந்தார்.

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி எங்களிடம் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பான விடயங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்த அமெரிக்க புதிய வரிக் கொள்கையை பற்றி ஆராய்வதற்காக கூட்டப்பட்ட சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க நாடாளுமன்றக்குழு தலைவருமான ஜீவன் தொண்டமான் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் ஜனாதிபதி ஆகுவதற்கு முன்பதாகவே இந்த வரி விதிப்பு சம்பந்தமாக பேசியிருந்தார். என்றும், நாம் அப்போதே ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தால் இன்று இவ்வாறான ஒரு சிக்கலுக்கு முகங்கொடுத்திருக்க வேண்டியதில்லை என சர்வக்கட்சி கூட்டத்தில் தெரிவித்திருந்தேன்.

மேலும் உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிக்கொள்கையை 90 நாட்களுக்கு விலக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றினைந்து சிறந்த தீர்வொன்றை எடுப்பார்கள் என தான் நம்புவதாக கருத்து வெளியிட்டிருந்தேன்.

இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள முன்மொழிவுகள் என்பவற்றை ஒன்றிணைத்து கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கருத்து வெளியிட்டிருந்தார்.

-ஊடகப்பிரிவு ஜீவன் தொண்டமான்

Related posts

ரஞ்சித் மத்தும பண்டார – ஆஷூ மாரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

நாடு திரும்பினார் பிரதமர்

பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!