விளையாட்டு

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி – ஜோகோவிச் தகுதிநீக்கம்

(UTV | அமேரிக்கா) – அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்தித்தார்.

போட்டியின் போது கோபமடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் வேகமாக அடித்தமையினால் பந்து நடுவரின் மீது பட்டதில் அவர் காயமடைந்தார்.

இந்நிலையில், போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா காலிறுதிக்கு முன்னேறினார்

Related posts

ஆசிய கிண்ண கிரிக்கெட் – இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஒலிம்பிக் தீபம் புகுஷிமாவில் ஏற்றப்பட்டது

ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை