வகைப்படுத்தப்படாத

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க கடற்படை கப்பலொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது.

நேற்று ஹம்பாந்தோட்டை வந்துள்ள குறித்த கப்பல், எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அங்கு தரித்து நிற்கும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பசுபிக் கடற்படை மற்றும் இலங்கை கடற்படை இலங்கையில் பசுபிக் கூட்டுறவு நிறுவனத்தின் நல்லெண்ண நோக்கினை முன்னெடுக்கும் நோக்கில் குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகி மாவட்டங்களிலும் பல்வேறு வேலைத் திட்டங்களையும் அமெரிக்கா முன்னெடுக்கவுள்ளதாகவும் அமெரிக்கதூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகள் சீனாவால் முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தமது ஆதிக்கத்தை அங்கு நிலைநிறுத்தும் வகையில் அமெரிக்க கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

Serena Williams fined for damaging match court

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த தம்பிக்க பெரேரா!

நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி