வகைப்படுத்தப்படாத

அமெரிக்க எப்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் அகற்றப்பட்டது குறித்த ட்ரம்ப் கருத்து

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க எப்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் கொமியினை பதவியில் இருந்து அகற்றியது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.

தம்மால் மேற்கொள்ளப்பட்ட முடிவிற்கு அமையவே அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக அந்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ரஷ்யா அநாவசியமாக தலையிட்டதாக வெளியான செய்தியினை அடுத்து டரம்பின் பிரசார அலுவலகர்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்த விடயம் குறித்து ஜேம்ஸ் கொமேயினுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததனை அடுத்தே அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

මාදම්පේ ගින්නක් ලොරි රථයක් විනාශවෙයි

இலங்கையின் பாதுகாப்பு படைகளை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவு – சீனா

Gusty winds and showers to continue over the island