வளைகுடா

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம்

(UTV|DUBAI) அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க ஒப்பந்தம் கையெழுத்தானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துபாய் மதினத் ஜுமைராவில் உலக அரசு உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அமீரக நிதித்துறை துணை மந்திரி ஒபைத் ஹுமைத் அல் தயார் மற்றும் உலக வங்கி குழும மத்திய கிழக்கு பகுதிக்கான துணைத்தலைவர் பரித் பெல்கஜ் ஆகியோர் முன்னிலையில் அபுதாபி குளோபல் மார்க்கெட்டின் தலைமை செயல் அலுவலர் காலித் அல் சுவைதி மற்றும் உலக வங்கி வளைகுடா நாடுகளுக்கான இயக்குனர் இசாம் அபுசுலைமான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த அலுவலகம் கொள்கை முடிவுகள் தொடர்பான ஆய்வுகள், அரசுத்துறைகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணை கண்காணிப்பு அமைப்பை விற்பனை செய்த சீன நிறுவனம்

மது குடித்த 27 பேர் பலி?

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி மன்னர் வாழ்த்து