உள்நாடு

அபராத கட்டணங்கள் செலுத்தும் சலுகை காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபதி ரஞ்ஜித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர், நிதி அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடன் இச்சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், மே மாதம் 02 ஆம் திகதி வரை இச்சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அறிவித்துள்ளார்.

மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பிறகு வழங்கப்பட்டுள்ள அபராதப் பத்திரங்களுக்கு மட்டுமே மேலதிக கட்டணங்கள் இல்லாமல் தபால் நிலையங்களில் அபராதப் பணத்தை செலுத்துவதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 16 தொடக்கம் 29 வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள அபராதப் பண பத்திரங்களுக்கு மேலதிக கட்டணத்துடன் அவற்றைச் செலுத்த மே 02ஆம் திகதி வரை சலுகை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

CEYPETCO எரிபொருள் விலைகளும் அதிகரிக்கும்

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

editor

பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் சொத்துக்கள் – தகவல் வழங்கிய விமல் வீரவங்ச | வீடியோ

editor