உள்நாடு

அனைத்து திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV |  யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“..யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் திரையரங்குகளை மூடவில்லை என்று எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படுகின்றன..” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

 

-யாழ். நிருபர் பிரதீபன்-

 

Related posts

இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்!

தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் அனுபவம் இருந்தாலும் அரசாங்கம் நிர்வகித்த அனுபவம் இல்லை – சாகல ரத்நாயக்க

editor

X-Press Pearl சிதைவுகள் அகற்றும் பணிகள் மே மாதம் நிறைவுக்கு