அரசியல்உள்நாடு

அனைத்து கட்சித் தலைவர்களையும் நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

அமெரிக்க வரிகளின் தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (10) கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, இந்தக் கூட்டம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது X கணக்கில் ஒரு குறிப்பொன்றையிட்டு இதைக் கூறினார்.

இன்று காலை, 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரியதாக அவர் கூறினார்.

Related posts

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்

வன விலங்குகளின் எண்ணிக்கையில் அதிகாரிப்பு

கொரோனா தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் கைது