வகைப்படுத்தப்படாத

அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாலத்தீவு அரசு அழைப்பு

(UTV|MALDIVES)-மாலைத்தீவு  கலகத்தில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் அதிபர் அப்துல்லா யாமீன் அவசர நிலை பிரகடனத்தை செய்தார். மேலும், பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு அசாதாரண நிலை நிலவி வருகிறது.

அதிபர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா மாலத்தீவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவும், மாலைதீவின்  மீது பாராமுகமாக உள்ளது.

இவ்வாறு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவிப்பதால் மாலைத்தீவு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது அதிபர் அப்துல்லாயாமீனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே எதிர்க்கட்சிகளுடன் சமாதானமாக சென்று பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அவர் இறங்கி உள்ளார்.

இதற்காக அவர் அனைத்து கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதுசம்பந்தமாக அதிபர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாலைதீவு  மக்களின் நலன் கருதி தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறோம்.

இதற்காக அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எப்போது அந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி எதிர்க்கட்சி தரப்பில் இருந்து கூறும்போது, நாங்கள் அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். எனவே எதிர்க்கட்சிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளாது என்று கருதப்படுகிறது. எனவே மாலைதீவு  பிரச்சினை மேலும் சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இலங்கையில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாட்டு தூதர்கள் மாலைத்தீவு  சென்றுள்ளனர். அவர்கள் மாலைத்தீவு  அதிபரை சந்திப்பதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. வெளியுறவுத்துறை செயலாளரை மட்டும் அவர்கள் சந்தித்தனர். அதிபர், அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோரை சந்திப்பதற்காக அவர்கள் அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள்.

மாலைதீவில்  நிலவும் பிரச்சினை குறித்து தெற்காசிய மனித உரிமை அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனநாயக விரோதமாக மாலைதீவு நடந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

வெள்ளை மாளிகையின் சட்டத்தரணி பதவி விலகுவார்

680 மில்லியன் டொலர் ஊழல்