உள்நாடு

அனைத்து அமைச்சுகளிலும் கொரோனா ஒழிப்புக் குழு

(UTV | கொழும்பு) – அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார்.

Zoom தொழில்நுட்பத்தினூடாக அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே சுகாதார அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். ஒரு பிரதான அதிகாரியின் கீழ் இந்த குழு இயங்கும்.

ஒரு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், அல்லது ஊழியர் நோய்வாய்ப்பட்டால் அல்லது நெருக்கடிக்கு உள்ளாகும் பட்சத்தில் சுகாதார வழிகாட்டியாக அமைய செயல்படும் விதம் குறித்து கவனம் செலுத்தப்படும். கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம், ஒவ்வொரு நிறுவனத்திலும் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பிலும் இந்த குழு கண்காணிக்கவுள்ளது.

   

Related posts

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் – பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

திடீரென ஐ.நா திரைக்கு வந்த ஆசாத் மெளலானா!

இலங்கையில் இருந்து வருவோருக்கு ஜப்பானின் விசேட அறிவித்தல்