உள்நாடு

அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு காலக்கெடு

(UTV|கொழும்பு) – அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பிரதேச செயலக அலுவலகங்களில் இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என, பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இவ்வாறு அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை ஒப்படைக்கும் பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்ப பட்ட  மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பில் விசாரணை

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

editor