சூடான செய்திகள் 1

அனுமதிப் பத்திரமற்ற மாகாண பயணிகள் பேரூந்துகளுக்கான அபராதத்தை அதிகரிக்கத் தீர்மானம்

(UTV|COLOMBO) – அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் மாகாண பயணிகள் பேரூந்துகளுக்கு விதிக்கப்பட்ட 2 இலட்சம் ரூபா அபராதத் தொகையை தற்போது 5 இலட்சமாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.

அனுமதிப் பத்திரமின்றி நூற்றுக்கும் அதிகமான பேரூந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அனுமதிப் பத்திரங்களின்றி பயணிக்கும் பேரூந்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதால், அபராத தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்தாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் பதவியேற்பு

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி பதவி யசந்த கோதாகொடவுக்கு