கேளிக்கை

அனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயனும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ‘ரெமோ’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

தற்போது அனிருத் இசையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் திட்டம் போட தெரியல என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் அனிருத் தோன்றி டான்ஸ் ஆடுகிறார்.

அனிருத்தின் டான்சை பார்த்த சிவகார்த்திகேயன் ‘எங்களுக்காக சீக்கிரமா ஒரு படம் பண்ணுங்க சார். இந்த வீடியோவில் ரொம்ப நல்லா இருக்கீங்க… அடுத்ததுக்காக நான் காத்திருக்கிறேன்’ என்று கூறி அனிருத்தை நடிக்க அழைத்துள்ளார். இதற்கு அனிருத் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

காதலியை மணந்த வில்லன்

தன் கணவரின் பிறந்தநாளுக்கு ப்ரியங்கா இதுவா பரிசாக கொடுத்தார்?

2018-ன் டாப் 10 பாடல்கள் – முதலிடத்தில் குலேபா