கிசு கிசு

அனாதை பிணமும் அரசியல் பேசும் நிலையும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமை நியமிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் 31ம் திகதிக்குள் கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு புதிய தலைமைக்கு வழி வகுக்கும் என கட்சி சட்டச் செயலாளர் நிஷ்ஷங்க நாணயக்கார தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் ஒரு துணைத் தலைவரை நியமிக்க கட்சிக்கு ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2021 ஜனவரி 1 முதல் கடமைகளை ஏற்க புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த முன்மொழிவை கட்சி மூத்தவர்கள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், செப்டம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து பிரேரணை முன்வைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செயற்குழு இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தால் இந்த திட்டம் நெருக்கடியை தீர்க்கும் என்று நிஷ்ஷங்க நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, துணைத் தலைவருக்கு வாக்களிப்பதன் மூலம் தலைமைத்துவத்தைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்க வாய்ப்பு

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சும் மாம்பழங்களை அனுப்பும் அறிக்கையும்

“ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது”