கேளிக்கை

அந்த நினைவுகள் வந்துவிட்டால் என்னையறியாமலே அழுகிறேன்-சன்னி லியோன்

நடிகை சன்னிலியோனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருப்பவர். டாப் ஹீரோக்களின் படங்களில் எப்படியாவது இடம் பெற்று விடுவார்.

அவருக்கு பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. வீரமாதேவி என்னும் படத்தில் அவர் தமிழில் நடித்துள்ளார். அவரின் வாழ்க்கை வரலாறு இணையதள தொடராக எடுக்கப்பட்டுள்ளது.

கரன்ஜித்கவுர் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் ஜி5 இணையதளத்தில் வந்திருக்கிறது. இந்த வலைதள தொடரின் படப்பிடிப்பில் இருந்த போது ஒருநாள் கண்ணீர்விட்டு அழுதுவிட்டாராம். எல்லோரும் பதறிப்போய என்னவென விசாரித்துள்ளனர்.

அப்போது சன்னி சிறுவயதிலேயே நான் பெற்றோரை இழந்துவிட்டேன். பின் ஆபாச பட நடிகையாகி பாலிவுட் சினிமாவுக்கு வந்து பிரபலமாவதற்குள் பல இன்னல்களை சந்தித்துள்ளேன்.

அந்த நினைவுகள் வந்தால் என்னையறியாமலே அழுகிறேன். அப்படியாக என் வாழ்க்கை பக்கங்கள் மோசமாக இருந்தது. மறக்க நினைத்தாலும் என்னால் முடியவில்லை என கூறினாராம்.

 

 

 

Related posts

’96’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் தெரியுமா?

முக்கிய மைல்கல்லை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்

எஸ்.பி. தொற்றில் இருந்து மீண்டார்