உள்நாடு

அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை மட்டுப்படுத்தி புதிய சுற்றறிக்கை

(UTV | கொழும்பு) –  வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு சதொச கிளை மேலாளர்களுக்கு கட்டுப்பாட்டு அதிகாரியினால் ஒரு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஐந்து கிலோ நாட்டு அரிசி கிலோ ஒன்று 110 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா கிலோ 130 ரூபாவிற்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 160 ரூபாவிற்கும் பருப்பு கிலோ 360 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

சதொச கிளைகளில் கோதுமை மா உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனைக்கு இல்லை என நுகர்வோர்மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

வில்பத்து பகுதியில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் – விசாரணை ஆரம்பம்

editor

ரஞ்சனின் குரல் பதிவுகள் கிடைக்கவில்லை – சபாநாயகர்