சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் பத்தேகமவிற்கும் இடையில் கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று அதிவேகமாக பயணித்துள்ள நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவா்களில் இரண்டு ஆண்களும் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தொல்பொருள் திட்டங்களை பார்வை இடுவதற்கு அனுமதி அட்டைகளை இணையத்தளம் மூலம் வழங்க வசதி

புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு

நிதி நிறுவனமொன்றில் 18 இலட்சம் ரூபாய் கொள்ளை