உலகம்

அதிர்ந்து போனது துருக்கி – இது வரை துருக்கியில் 53 இறப்புகள்

(UTV | துருக்கி) – அதிர்ந்து போனது துருக்கி – இது வரை துருக்கியில் 53 இறப்புகள்

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

துருக்கியில் குறைந்தது 53 இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் சிரியாவில் மேலும் 11 பேர் இறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு “தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன” என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் காஸியான்டெப்பில் இருந்து 33 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது சுமார் 18 கிமீ (11 மைல்) ஆழத்தில் இருந்தது, மேலும் 10 நிமிடங்களுக்குப் பிறகு வலுவான 6.7 அதிர்வு ஏற்பட்டதாக்க தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

மேலும், துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உ்ட்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பிலான அறிவிப்பு

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !