உள்நாடு

அதிகரிக்கும் பேக்கரி பொருட்களின் விலை!

(UTV | கொழும்பு) –

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் முட்டை, சீனி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிடாவிட்டால், பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினாலும், கேக் கிலோ ஒன்றின் விலை நூறு ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முட்டையின் விலை 60 ரூபாவாகவும், ஒரு கிலோ சீனி 305 ரூபாவாகவும், ஒரு கிலோ உப்பு 400 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமையே இந்த விலை உயர்விற்கு காரணம். குறிப்பாக சந்தையில் முட்டை மற்றும் சீனியின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் குறைந்த விலையில் கேக் கிடைக்கும் வாய்ப்பை மக்கள் இழக்க நேரிடும்.

கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலம் முடியும் வரை இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முட்டை மற்றும் சீனி முக்கியமாக பேக்கரி பொருட்களுக்கு தேவைப்படுவதுடன், மீன் ரொட்டி, முட்டை ரொட்டி, கட்லட், பஜ்ஜி போன்ற சிற்றுண்டிகளின் உற்பத்திக்கு வெங்காயம் இன்றியமையாதது. இந்த பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி உரிமையாளர்களால் வாங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை!

இறக்குமதி அரிசியில் வண்டுகள் – பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் – அரிசியை மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

editor

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவத்தினர்