உள்நாடு

அதிக வரையறைகளால் பாதிக்கப்படும் இலங்கையின் பொருளாதாரம் – ஜூலி சங்

(UTV | கொழும்பு) –

அதிக வரையறைகளை விதிக்கும், தெளிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அவை முதலீடுகளையும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்

 

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு

கிழக்கு மாகாணம் அதி உச்ச அபிவிருத்திகளை மகிந்தவின் ஆட்சி காலத்திலேயே அடைந்தது – நாமல் எம்.பி

editor

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”