உள்நாடு

அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் யாரை ஆதரிக்கிறது ?

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அந்த காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் கலாநிதி வை.எஸ். மொஹமட் ஷியா தெரிவித்துள்ளார்.

கடந்த சில தேர்தல்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தமது கட்சி ஆதரவு தெரிவித்ததாகவும் போராட்டங்களின் பின்னர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்த ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதாலேயே தமது கட்சியின் ஆதரவை தனக்கு வழங்க தீர்மானித்ததாகவும் அவர் கூறுகிறார்.

தமது கட்சி எடுத்த இந்த தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சரத் வீரசேகரவுக்கு கொரோனா

இரண்டு திமிங்கிலங்கள் உயிரிழந்தன

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்