உள்நாடு

அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் சேர வேண்டாம்

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய தேவைக்காக இல்லாவிட்டால் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் சேர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 23ஆம் திகதி பெட்ரோல் கப்பலையும், ஜூன் 24ஆம் திகதி டீசல் கப்பலையும் பாதுகாப்பதற்காக 90 மில்லியன் டாலர் கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்கான வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது..

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

ஸ்புட்னிக் V தடுப்பூசி பெற்றுக்கொள்ள நடவடிக்கை.

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் பச்சை ஆப்பிள் அறுவடை ஜனாதிபதிக்கு