சூடான செய்திகள் 1வணிகம்

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சில் இன்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக, இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் அதனை வர்த்தமானியில் வௌியிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

விமான நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்