கேளிக்கை

அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – சோகத்தில் ரசிகர்கள்

(UTV|இந்தியா) – ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

இப்படத்தில் இடம் பெறும் பைக் சேஸிங் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த ரசிகர்கள், அஜித் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் GetWellSoonThala என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

இந்த விபத்தில் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின்பு அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சோனாக்ஷி இனது ‘I Love You’

சமந்தா முத்தத்துக்கு ரூ.10 லட்சம்

ஓமனில் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா…