கேளிக்கை

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ’குக் வித் கோமாளி’

(UTV | இந்தியா) – அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முடிந்துவிடும் என்றும் வரும் மே 1ஆம் திகதி அஜித் பிறந்த நாளில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு ஒருபக்கம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ் என்பவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இது குறித்த ஒரு உரையாடல் வீடியோ தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த உரையாடலில் இருந்து ’குக் வித் கோமாளி’ புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Related posts

பிரபல “ஹரி பொட்டர்” ஹாஸ்ய நடிகர் உலகை நீத்தார்

பாலிவுட் நடிகை சொனாக்ஷிக்கு பிடியாணை

பிகில் பட பாடல்; அட்லீ திடீர் அறிவிப்பு