வகைப்படுத்தப்படாத

அசாதாரண காலநிலையை உலகம் எதிர்கொள்ளும் – உலக காலநிலை அமைப்பு எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடத்தில் உலகம் அசாதாரண காலநிலையையே எதிர்கொள்ளும் என்று உலக காலநிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருடத்தின் முதல் பகுதி அசாதாரண வெப்பம் மற்றும் குளிர் காலநிலையாகக் காணப்பட்டது. இந்த வருடம் இதற்கு முந்திய வருடத்தையும் விட பயங்கரமாக இருக்குமென வளிமண்டலவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு மக்கள் தயாராக வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தில் உலகில் மூன்று வலயங்கள் வரட்சியையும், வெள்ள அனர்த்தத்தையும் எதிர்கொள்ள நேரிடும். இது தவிர உலகவெப்பமயமாதல் காரணமாக ஆட்டிக் கண்டத்தில் உயிரினங்களும், தாவரங்களும் அழிந்துள்ளன.

வளிமண்டலவியலாளர்கள் விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பூமியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக காலநிலை ஆராய்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் டேவிட் காள்சன் தெரிவித்துள்ளார்.

Related posts

BAR briefed on SOFA, MCC & Land Act

வெள்ளவத்தை கட்டிட உரிமையாளர் விளக்கமறியலில்

தொடர்ந்து 11வது முறையாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி