உள்நாடு

அங்குலான துப்பாக்கிச்சூடு : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் [UPDATE]

(UTV | கொழும்பு) -அங்குலானவில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலியா சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

+++++++++++++++++++++++++++++++++++++++  UPDATE 

அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பதற்ற நிலை

அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் இன்று காலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் இன்று பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குமான வாய்ப்பை வழங்குகிறது – அலி சப்ரி.

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்

மற்றுமொரு காதி நீதிபதி அதிரடியாக கைது!