வகைப்படுத்தப்படாத

ஃபுளோரன்ஸ் சூறாவளி-மக்கள் வெளியேற்றம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்குமுன்பு அந்த பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் உடனடியாக வெளியேறி வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சூறாவளியின் தாக்கம் அடுத்த 48 மணி நேரங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Fuel Pricing Committee to convene today

ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாட்டில் உலகத்தலைவர்கள்

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க யோசனை