கிசு கிசு

YouTube நிறுவனத்திற்கு 200 மில்லியன் அபராதம்

(UTVNEWS|COLOMBO) – சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்திற்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் Data-க்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள்,குற்றம்சாட்டியுள்ளன.

அந்த Data-க்கள் மூலம் சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் விசாரித்தது. இதன்போது, விதிகளை மீறியதற்காக 150 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் செலுத்த யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், இதற்கு அந்நாட்டு நீதித்துறை ஒப்புதல் வழங்க வேண்டும். அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், சிறுவர்களின் அந்தரங்கம் பேணும் உரிமை தொடர்பாக விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related posts

அடர்ந்த காட்டில் மாயமான பெண் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு?

ஈரான் மீதான தாக்குதல் இரத்து?

IPL நடுவரை கடுமையாக விமர்சித்த டோனி மனைவி