உள்நாடு

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை(02) ஆரம்பமாக உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார்.

Xpress Pearl என்ற கப்பல் விபத்துக்கு உள்ளாகியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் இதற்கென 3,000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. 65 இலட்சம் குடும்பங்கள் இதன் மூலம் நன்மை அடையவுள்ளன.

இதேவேளை Xpress Pearl கப்பல் விபத்துக்குள்ளானமையினால் கடற்றொழில் துறைக்கு ஏற்பட்ட நஷ்டங்களை மதிப்பீடு செய்து கடற் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. நாளாந்த வருமானத்தை இழந்த மீனவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor

ஆபத்து நிறைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை

துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!