உள்நாடு

X-Press Pearl சிதைவுகள் அகற்றும் பணிகள் மே மாதம் நிறைவுக்கு

(UTV | கொழும்பு) – கடற்பரப்பில் விபத்துக்குள்ளான X-Press Pearl கப்பலின் 78 வீத சிதைவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமெரிக்க நிறுவனம் இது குறித்து அறிவித்துள்ளதாக சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய X-Press Pearl கப்பலை முற்றாக அகற்றுவதற்காக சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான 02 கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்துள்ளன.

குறித்த இரண்டு கப்பல்கள் ஊடாக, X-Press Pearl கப்பலை அகற்றுவது குறித்து ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்வதாக சீன நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related posts

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

தேர்தல் முடிவுகளைப் போன்றே கொவிட் முடிவுகளும் வெளியாகின்றன

அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது!