உலகம்சூடான செய்திகள் 1

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

(UTV | கொழும்பு) –  whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

whatsapp பயனர்களின் பயன்பாட்டிற்காக புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.

meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் whatsapp செயலிக்கு உலகம் முழுவதும் பல கோடி பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக whatsapp அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கமானது

அதன்படி பயனர்களின் உபயோகத்திற்காக புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது.

இறுதியாக வெளியான புதிய வசதியான தனக்கு தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் முறையை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அந்நிறுவனம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை ஒருமுறை மட்டுமே வாசிக்கும் வகையிலான புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறியமுடிகின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி எதிர்வரும் 8ஆம் திகதி முதல்

கடந்த ஆறு மாதங்களில் 18 மில்லயன் ரூபாவுக்கும் அதிகமான பீடீ சுற்றும் இலைகள் மீட்பு