வணிகம்

vivo V19 செல்பி திறன்களை பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு

(UTV | கொழும்பு) – vivo தனது புதிய V19 ஸ்மார்ட்போனை இலங்கையில் இன்று அறிமுகப்படுத்தியதுடன், இது இரட்டை முன் 32MP + 8MP super wide-angle கெமரா மற்றும் super AMOLED FHD+ iView  திரை  வடிவமைப்புடன் கூடியதென்பதுடன், நுகர்வோருக்கு உண்மையிலேயே புதுமையான மொபைல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு அசாதாரண செல்பி திறன்கள் மற்றும் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது.

“vivo நுகர்வோரை மனதில் கொண்டு புதுமைகளை படைக்க உறுதிபூண்டுள்ளது, மேலும் V19 நுகர்வோரின் தேவைகளைப் பற்றிய நமது ஆழமான புரிதலைப் பிரதிபலிக்கிறது. இத்துறையில்  முன்னணியான செல்பி தொழில்நுட்பம், அழகான வடிவமைப்பு மற்றும் உறுதியான செயல்திறன் ஆகியவற்றுடன் கெமரா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி அக்கறை கொண்ட இளம் நுகர்வோருக்கு V19 மிகவும் பொருத்தமானது”, என vivo Mobile Lankaவின்  பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் தெரிவிக்கின்றார். “V19  என்பது இளம் நுகர்வோரின் வாழ்க்கை முறைகளை முழுமையாக்குவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு டிரெண்ட்செட்டிங் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் முன்னணியான கெமரா அமைப்புகளானது இரவு நேர செல்ஃபிக்களுக்கு ஒரு முழுமையான புதிய அர்த்தத்தை ஏற்படுத்தவுள்ளன.”

அழகான செல்பிகளுக்கான அதி நவீன கெமரா தொழில்நுட்பம்

32MP  பிரதான கெமரா மற்றும் 8MP super wide-angle கெமராவைக் கொண்ட V19 இன் இரட்டை முன் கெமராவானது பாவனையாளர்கள் நேரம் மற்றும் இடத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களின் சிறந்த செல்பியை எடுக்க உதவுகிறது.  உண்மையான மற்றும் ஆச்சயர்ப்படவைக்கும் காட்சிகளுக்காக முன்புறம் மற்றும் பின்னணிக்கு இடையில் பரந்த கோண வில்லை திரிபை சுயாதீனமாக சரிசெய்யக் கூடிய, உள்ளமைக்கப்பட்ட AI படிமுறையுடன், முன் கெமரா 105 பாகை வரை பரந்த-கோண செல்பியை ஆதரிக்கின்றது. முன் கெமராவில் Ultra Stable Selfie Videoவும் பொருத்தப்பட்டுள்ளது, இது பரந்த கோண செல்பி வீடியோக்களுக்கு புதிய தரத்திலான நிலைத்தன்மையைக் கொண்டு வருகிறது.

V19 பின்பக்கத்தில் சக்திவாய்ந்த AI Quad கெமராவைக் கொண்டுள்ளது. இதில் 48MP பிரதான கெமரா, 8MP super wide-angle கெமரா, 2MP macro கெமரா மற்றும் 2MP bokeh கெமராவும் உள்ளன. V19 ஆனது Ultra Stable Videoவுடன், தொழில்சார் தர வீடியோ எடிட்டிங்குக்கென AI Video Filters, AI Video Editor மற்றும் AI Image Matting உள்ளிட்ட AI படங்கள் மற்றும் வீடியோ சிறப்பம்சத்துடன் கூடியது.

முன்பக்க மற்றும் பின்பக்க கெமராக்கள் இரண்டும் இரவு நேரங்களில் சிறப்பான படங்களை எடுப்பதெற்கென பல புதிய நுட்பங்களைக் கொண்டுள்ளன. முன் கெமராவின் Super Night Selfie mode- அடுக்கு அடிப்படையிலான அழகுபடுத்தல், இடஞ்சார்ந்த Merging Denoising மற்றும்Multiple Exposure ஆகியன  இரவு நேரத்தில் நகரின் வான எல்லையையோ அல்லது கிராமப்புறங்களின் விண்மீன்கள் நிறைந்த வானத்தின் பின்னணியிலோ தெளிவான மற்றும் அழகான செல்பிக்களை எடுக்க உதவுகின்றது. பின்பக்க கமெராவின் Super Night Portrait mode –  Multi-Frame Screening, Temporal Alignment,  மற்றும் Spatial Merging Denoising ஆகிய அம்சங்களின் மூலம்  வாழ்க்கையின் அனைத்து அதிசயங்களினதும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவில் கூட எடுக்க முடியும்.

 

ஒரு தனித்துவமான பாணிக்கான புதுமையான திரை மற்றும் வடிவமைப்பு

V19 நேர்த்தியான 6.44-அங்குல Super AMOLED FHD+ iView  திரையைக் கொண்டுள்ளது. இது உயர் தரமான E3 OLED இலிருந்து உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை, 100% DCI-P3 color gamut ஐ ஆதரிப்பதனால், துடிப்பான வண்ணங்களை உயிர்ப்பிக்கிறது. திரையின் பிரகாசம் சுற்றுப்புற ஒளி நிலைகளுக்கு ஏற்றவாறு தானாக சரிசெய்து கொள்கின்றது. மேலும் E2 OLED ஐ விட 42 சதவீதம் அதிக நீல ஒளியை வடிகட்டுகிறது, இது ஆரோக்கியமான பாவனையாளர் அனுபவத்துக்கு வழிசெய்கின்றது.

V19 சௌகரியம் மற்றும் ஸ்டைல் ஆகிய இரண்டிற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது பாவனையாளர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான vivoவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட 3D வளைவுகளுடன் V19  பாவனையாளர்களின் உள்ளங்கைகளில் சிறப்பாக பொருந்திப் போவதுடன்,  நேர்த்தியையும் நுட்பத்தையும் வழங்குகிறது.

 

வேகமாக நகரும் நுகர்வோரின் முழு நாளுக்குமான பயன்பாட்டை மேம்படுத்தும் வலுவான செயல்திறன்

இத்துறையில் முன்னணி செல்பி திறன்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பிற்கு மேலதிகமாக, V19 உயர்தர செயல்திறன் மற்றும் உயர் மின்கல செயல்திறனைக் கொண்டுள்ளது. ஒரு சூப்பர் கொள்ளளவு கொண்ட 4500mAh மின்கலமானது நீண்ட கால நீடித்த தன்மையை வழங்கும் அதேவேளை, 33W vivo FlashCharge 2.0 தொழில்நுட்பம் 0 முதல் 54 சதவீத மின்னேற்றத்தை 30 நிமிடங்களில் வழங்குகின்றது. இது வேகமாக நகரும் நுகர்வோருக்கு உறுதுணையாக உள்ளது.

Qualcomm Snapdragon octa-core 712 புரசசரினால் வலுவூட்டப்படும் V19, வேகமான இடைமுகம் மற்றும் சிறந்த கணினிச் செயல்திறனைக் கொண்டுள்ளது. அதன் செயற்கை நுண்ணறிவு AI இனால் வலுவூட்டப்படும் கெமரா திறன்களின் அதிக ஆற்றல் நுகர்வுக்கு ஆதரவாக,  V19 செப்பு குழாய் திரவ குளிரூட்டலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நீண்ட CPU ஆயுள், அதிக நம்பகமான போன் செயல்திறன் மற்றும் சீரான பல பணிகளை ஆற்றும் திறன் ஆகியவற்றை உறுதி செய்கிறது. V19 8GB RAM + 128GB ROM  ஆகியவற்றைக் கொண்டுள்ளமையானது,  பாவனையாளர் பணி, ஓய்வு மற்றும் விளையாட்டுக்கு தேவையான அனைத்தையும் சேமிக்க அனுமதிக்கிறது.

இது கேம்சங்களுக்கும் ஏற்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளமையானது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகின்றது.

கிடைக்கும் விபரங்கள்

V19, Gleam Black  மற்றும் Sleek Silver ஆகிய நிறங்களில் 2020 ஜூன் 16 முதல், ரூபா 77.990.00 என்ற விலைக்கு இலங்கையில் கிடைக்கின்றது.

vivo பற்றி

ஸ்மார்ட் டெர்மினல்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகள் உள்ளடங்கலான முக்கிய வணிகங்களுடன் பொருட்கள் சார்த ஒரு உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமே vivo  ஆகும். தனித்துவமான மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் தொழில்நுட்பத்தையும் நவநாகரிகத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான, புதுபோக்கினை உருவாக்கும் ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதன் மூலம் பாவனையாளர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்க vivo உறுதிபூண்டுள்ளது. “பென்ஃபென்”, “புத்துருவாக்கம்” மற்றும் “நுகர்வோர் சார்நிலை” ஆகியவற்றை உள்ளடக்கிய அதன் முக்கிய பெறுமானங்களுக்கு இணங்கி, vivo ஒரு முன்னணி, நீண்டகால, உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாறுவதற்கான தனது தொலைநோக்கினை அடைய பேண்தகு அபிவிருத்தி மூலோபாயத்தை செயல்படுத்தியுள்ளது.

vivoவின் தலைமையகம் சீனாவின் Dongguanஇல் அமைந்துள்ளதுடன் Shenzhen, Dongguan, Nanjing, Beijing, Hangzhou, Shanghai, Taipei, Tokyo மற்றும் San Diego ஆகிய இடங்களில் 9 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையங்கள் 5G, செயற்கை நுண்ணறிவு, புகைப்படவியல், வடிவமைப்பு மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகள் உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. vivo சீனா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஐந்து உற்பத்தி மையங்களை ஸ்தாபித்துள்ளது. இது ஒவ்வொரு வருடமும் 200 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை தயாரிக்கின்றது. 2019 ஆம் ஆண்டு நிலையின் பிரகாரம், விவோ தனது விற்பனை வலையமைப்பை 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உருவாக்கியுள்ளது, இது உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான செயற்பாட்டில் உள்ள பாவனையாளர்களை கவர்ந்துள்ளது.

Related posts

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF

ஹுவாவி ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான கழிவுகளை வழங்கும் Ikman Deals