உள்நாடுசூடான செய்திகள் 1

{VIDEO} மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச கேள்வி

(UTV | கொழும்பு) –

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு அத்தியாவசியமான ஹெவிமாகேன் என்ற மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி எஸ்.எம்.பி.கருணாரத்ன கூறுவதாகவும்,தற்போது 17 மருந்துகளே இருப்பதால்,

தேவையான சிசேரியன் அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு, ஏனைய சிசேரியன் அறுவை சிகிச்சைகளை இடை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இந்நாட்டில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையுடன் தொடர்பான ஒரு பெரிய பிரச்சினை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த ஹெவிமாகேன் என்ற மருந்து நிதி இல்லாததால் ஏற்பட்ட தட்டுப்பாடா? அல்லது அரசாங்கத்தின் திறமையின்மையே காரணமா ஏற்பட்ட தட்டுப்பாடா என கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,​​இவ்வாறான மருந்துப் பொருட்கள் பிரச்சினை தோன்றியமை தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான பதில் தேவை என்றும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரின் அறிக்கையின் பிரகாரம், இந்நாட்டில் 10 இலட்சம் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை யாது என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,இந்நாட்டின் தாய்மார்களையும் பிள்ளைகளையும் மரணப் படுக்கைக்கு கொண்டு செல்லும் வரை அரசாங்கம் காத்திருக்கிறதா? அல்லது இதற்கு விரைவான தீர்வு தருவீர்களா என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என்றும் குறிப்பிட்டார்.

மருந்துப்பொருள் மாபியாவினால் இந்நாட்டு குடிமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதும் இது மக்களை ஏமாற்றும் மற்றுமொரு சூழ்ச்சி என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களை இனியும் ஏமாற விடமாட்டேன் என்றும்,சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று முதல் கையெழுத்திடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலைகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவிப்பு

தேர்தலில் வாக்குப்பதிவு குறையும்