வணிகம்

Viberஆல் privacy boost அறிமுகம்

(UTV | கொழும்பு) – இலகுவாக மற்றும் இலவசமாக தொடர்பாடல்களை பேணக்கூடிய உலகின் முன்னணி appகளில் ஒன்றான Viber, சகல chatகளிலும் “disappearing messages”எனும் புதிய உள்ளம்சத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னர் இரகசிய முறையில் முன்னெடுக்கும் chatகளில் மாத்திரம் காணப்பட்ட இந்த உள்ளம்சம் தற்போது சகல பாவனையாளர்களுக்கும் text, photo, video அல்லது வேறெந்த கோர்ப்புகளையும் சில செக்கன்கள், நிமிடங்கள், மணித்தியாலங்கள் அல்லது தினங்களில் அனுப்புவதற்கு நேரத்தை குறித்து பயன்படுத்தக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பெறுநர் தகவலை பார்வையிட்ட பின்னர் குறித்த தகவலை அழித்துவிடுவதற்கான சுயமாக காலம் கணிக்கும் முறை இதில் அடங்கியிருக்கும். ஒருவருக்கொருவரிடையே மேற்கொள்ளப்படும் chatகளின் போது தகவல்கள் காணாமல் போதல் என்பது உலகின் பாதுகாப்பான தகவல் பரிமாற்ற app எனும் Viber இன் நிலையை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

அழிந்துவிடக்கூடிய தகவல் ஒன்றை உருவாக்குவதற்கு, பாவனையாளர் செய்ய வேண்டியது:

  • chat இன் கீழ் பகுதியில் காணப்படும் கடிகாரம் ஐகொனை அழுத்தி, குறித்த தகவல் அழிந்துவிட வேண்டிய காலத்தை தெரிவு செய்ய வேண்டும்.
  • பெறுநருக்கு தகவல் ஒன்றை டைப் செய்து அனுப்பவும்.

Viber தனது பாவனையாளர்களுக்கான அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக உறுதி செய்திருந்தது. தகவல் பரிமாறல் app இல் 2015 ஆம் ஆண்டில் Viber அறிமுகம் செய்த உள்ளம்சமாக “delete message” அமைந்திருந்தது. 2016 இல் end-to-end encryption உள்ளம்சமும், 2017 இல் மறைமுகமான மற்றும் இரகசிய chat கள் அடங்கியிருந்தன. பிரத்தியேக பாதுகாப்புக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதி செய்வதில் ஒரு அங்கமாக, தனது வழமையான chatகளில் disappearing messages ஐ அறிமுகம் செய்யவுள்ளதாக Viber அறிவித்துள்ளது.

Viber இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஒஃபிர் இயால் கருத்துத் தெரிவிக்கையில்,

”சகல ஒருவருக்கொருவரிடையிலான chatகளிலும் disappearing messages உள்ளம்சத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் அறிவிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். 2017 ஆம் ஆண்டில் Viber இனால் அறிமுகம் செய்யப்பட்ட இரகசிய அனுபவத்தை தொடர்ந்து, இரகசியத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தோம். குறிப்பாக disappearing message ஒன்றின் screenshot ஐ பெறுநர் எடுப்பின் அது தொடர்பில் அனுப்புபவருக்கு அறிவிக்கும் முறைமையும் வழமையான chatஇல் உள்ளடக்கப்படும். உலகின் பாதுகாப்பான தகவல் பரிமாற்ற கட்டமைப்பாக திகழும் எமது பயணத்தில் மற்றுமொரு படியாக இது அமைந்துள்ளது.” என்றார்.

வீடியோ: https://clck.ru/N4iey

Related posts

COVID-19 ஐ தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குவதற்கு அவசியமான திறன்களை SLIIT பட்டதாரிகள் கொண்டுள்ளனர்

பில்ட் ஸ்ரீலங்கா 2017 கண்காட்சி

இலங்கையின் திரவ இயற்கை வாயு விநியோக முறையில் புதிய புரட்சி