உள்நாடு

V8 ரக சூப்பர் காரை வழங்கவும் – அமைச்சர் சீதா மீண்டும் புலம்பல்

(UTV | கொழும்பு) –

சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல தனக்கு V8 ரக சூப்பர் கார் ஒன்றை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  இராஜாங்க அமைச்சருக்கு பென்ஸ் ரக காரும் BMW ரக காரும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு வாகனங்களுக்கு மேலதிகமாக, உயரிய V8 ரக வாகனமும் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனத்தை தற்போது அந்த அமைச்சின் மேலதிக செயலாளரான பொது சுகாதார சேவைகள் நிபுணர் டாக்டர் லக்ஷ்மி சோமதுங்க பயன்படுத்துகிறார். வாகனத்தை வழங்குவதற்கு அவர் தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி அரசாங்கம் பதவி விலகியதன் பின்னர், சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதிலும், அப்போது இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்படவில்லை.

இதனையடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய காரை இரண்டு மேலதிக செயலாளர்கள் பயன்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், திருமதி சீதா அரம்பேபொல முன்னர் குடை கோரியமை தொடர்பில் பல விவாதங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நோயிலிருந்து 369 பேர் மீண்டனர்

நிதி ஒதுகீடுகளுக்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரம்

இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழு