சூடான செய்திகள் 1

updete – புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

(UTV|COLOMBO)-புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் அலுவிகாரவும், மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லகீ ஜயவர்தனவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் அஜித் மான்னப்பெரும சுற்றுச்சூழல் பிரதியமைச்சராகவும், விவசயாத்துறை பிரதியமைச்சராக அங்கஜன் ராமநாதனும், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தானும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதனுடன், உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதியமைச்சராக எட்வட் குணசேகரவும், அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்கு பிரதியமைச்சராக நளின் பண்டாரவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor

UPDATE-கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பல இலட்சம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் ஒருவர் கைது