உள்நாடு

UPDATE – நிலைமை மோசமாகிறது STF, கலகம் அடக்கும் படையினர் குவிப்பு : எதுக்கும் அடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ், எஸ்டிஎஃப் மற்றும் இராணுவமும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பழைய கொட்டாவ வீதியில் உள்ள ஜூபிலி போஸ்ட் சந்தியிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் பெருமளவான மக்கள் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு முதலிடம்

Google செயலிழந்தது

சுகாதார அமைச்சுக்கு மனு