சூடான செய்திகள் 1

UPDATE-ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை சற்றுமுன்னர் 07 நீதியரசர்கள் முன்னிலையில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

 


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி 13 தரப்பினரால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் அல்ல, பாரளுமன்றத்தின் அதிகாரங்களே குறைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் பாராளுமன்றம்  கலைக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி 13 தரப்புக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன்போதே சட்டமா அதிபர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 13 தரப்புக்களினால் குறித்த மனுக்கள் தாக்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருந்த உயர்நீதிமன்றம், ஜனாதிபதியினால்பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்ததமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடை செய்து நாளைய தினம் வரை இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு விளக்கமறியல்

ஷாகித் அப்ரிடியால் பெற முடியாத சாதனையை எலிஸ் பெர்ரி பெற்றார்

சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள்