வகைப்படுத்தப்படாத

Update – ஜனாதிபதி பங்களாதேஸ் புறப்பட்டார்!

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாள் அரச விஜயம் மேற்கொண்டு இன்று காலை பங்களாதேஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 189 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் பங்களாதேஸ் நோக்கி  சென்றுள்ளனர்.

பங்களாதேஸின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் ஜனாதிபதி, அந்த நாட்டில் பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

—————————————————————————————————————

Update :- Thursday, July 13, 2017 8.11 Am

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்களாதேஸிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பங்களாதேஸின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் ஜனாதிபதி, அந்த நாட்டில் பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

மேலும் பங்களாதேஸ் விவசாயத்துறையில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்த காட்சிப் படுத்தல்களையும் அவர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியுடன் இலங்கையைச் சேர்ந்த 40க்கும் அதிகமான வர்த்தக சமுகத்தினர் பயணிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

West Indies beat Afghanistan by 23 runs

கொழும்பில் அதிக மழை

அவிசாவளை பழைய வீதி நீரில் மூழ்கியுள்ளது