உள்நாடு

UPDATE – கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

(UTV | திருகோணமலை) – கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.

குறித்த சம்பவம் இன்று (23.) காலை இடம் பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது.

காப்பற்றப்பட்ட 11 பேர் நோயாளர் காவு வண்டியின் மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவ்விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் மரணித்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம் பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

மேலும் 02 பேர் பூரண குணம்

PHI அதிகாரிகள் போராட்டம் – இன்று தீர்மானம்

PUCSL தலைவரை பதவி நீக்கம் செய்வதுடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது- கஞ்சன