வகைப்படுத்தப்படாத

UPDATE: ஊகவியலாளர்களை தாக்க முற்பட்ட ஆசிரியரின் கையிலிருக்கும் செங்கல் – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் கல்வி வலயம் சென்ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தின் ஆங்கிளம் பாட ஆசிரியர் தரம் 10 கல்வி பயிலும் மாணவன் ஒருவனை கடந்த09.06.2017 தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும் பழையமாணவர்களும்  நடத்திய ஆர்பாட்டதை செய்தி சேகரிக்க சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களை பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் தாக்கியமை தொடர்பினான விசாரணையை நோர்வூட் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

அமரேசன் அனுசான் என்ற மாணவன் வழங்கப்பட மேலதிக பாடவேலையை  செய்யவில்லையென. ஆங்கிளம் பாட ஆசிரியர் தாக்கியதாக.          மா ணவனினால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து  சந்தேக நபரான குறித்த ஆசிரியரை 12.06.2017 நோர்வூட் பொலிஸார் கைது செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 19 ம் திகதிவரை விளக்கமரியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவனராஜா உத்தரவிட்டார்

தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கும் பொற்றோர்களுக்கும் பழைமாணவர்களும் இடையில்     12 06.2017 காலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து பொற்றோர்களினாலும் பழைய மாணவர்களினால் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட முற்பட்ட போது பாடசாலை ஆசிரியகளுக்கும் பொற்றோர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முருகல் நிலையை செய்தி சேகரித்த போதே அதிபர் உட்பட ஆசிரியர்களினால் தாக்கப்பட்டதுடன் ஊடகத்தொழிலுக்கும் இடையூறு விளைத்ததாக பாடசாலை மாணவர்களையும் குறித்த ஊடகவியலாளர்களை தாக்குமாறு அதிபர் மாணவர்களிடத்தில் தெரிவித்தாகவும் ஆசிரியரின் தாக்குதல் தொடர்பிலாக வெளிந்த செய்திகளில் பாடசாலையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே தாக்குதல் நடத்தியாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களினால்   நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு    செய்யப்பட்டுள்ளது

சிங்க  ஊடகமான சிரச நிறுவனத்தின் பிராந்திய ஊடவியலாளர் இந்திக ரொசான் கலூவாராச்சி தமிழ் பத்திரிகைகளின் பிராந்திய  ஊடகவியலாளர் எஸ்.சதிஸ் ஆகியோரே தாக்குதலுக்கு இழக்காகியவர்கள்

எனினும் கடமை நேரத்தில் இடையூறு விளைவித்தாக குறித்த ஊடகவியலாளர்கள் மீது பாடசாலையின் அதிபரினால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இரு முறைபாடுகள்   தொடர்பிலான மேலதிக விசாரணையை நோர்வூட் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/jouu.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/jou.jpg”]

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

ஆசிரியரின் தாக்குதலுக்கு இழக்காகிய மாணவன் வைத்தியசாலையில் – [photos]

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு கைது..